Jump to content


Photo

மாலை : இன்றைய செய்திகள் (16.04.18)

News

  • This topic is locked This topic is locked
2 replies to this topic

#1 🅣.🄼.🄸.🄽.🄴.🅡

🅣.🄼.🄸.🄽.🄴.🅡

    tђคlค 🅐🅙🅘🅣🅗 รเг

  • Team Rockers
  • 1,999 posts

Posted 16 April 2018 - 05:25 PM

மாலை : இன்றைய செய்திகள் (16.04.18)
 
1. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 16 இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
2. காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது என பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் கூறினார். 
 
3. நாட்டில் நிலவும் அசாதாரண சூழலுக்கு பொறுப்பேற்கும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் 49 பேர் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.
 
4. காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
5. ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அட்லாண்டிக் பெருங்கடல் நீரோட்டத்தின் வேகம் புவிவெப்பமயமாதல் காரணமாக குறைந்திருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
6. டெல்லி-மும்பை ரயில் பாதையில், நகர் எல்லைக்குள் உள்ள பகுதிகளில் இருபுறமும் 500 கி.மீ. தொலைவுக்கு மதில்சுவர் கட்ட ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
 
7. கோடை காலத்தின் துவக்கத்திலேயே நாட்டில் உள்ள 153 மாவட்டங்கள் கடுமையான வறட்சிக்கு உள்ளாகி உள்ளதாக இந்திய வானிலை மைய புள்ளி விபரம் தெரிவித்துள்ளது. 
 
8. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வரும் மே 16ம் தேதி வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், மே 30ம் தேதி 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், மே 23ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது. முதல் முறையாக 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு முதல் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
9. ஏப்ரல் 20-ம் தேதியுடன் மார்ச் மாதத்திற்கான வரிக் கணக்கு தாக்கல் முடிவடையும் நிலையில், ஜி.எஸ்.டி வரி ரூ.93,000 - 95,000 கோடி வரை வசூலாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
10. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை மே 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
11. பெண்கள் கிரிக்கெட்டில் இந்த வருடம் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிரிதி மந்தனா 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

  • Sharpu likes this

🄼🄸🄽🄴


#2 Sharpu

Sharpu

    Fan of TR👑

  • VIP
  • 754 posts

Posted 16 April 2018 - 10:53 PM

நன்றி......

#3 Sharpu

Sharpu

    Fan of TR👑

  • VIP
  • 754 posts

Posted 16 April 2018 - 10:58 PM

Don't use yellow colour, please.....